தண்ணீர் கேட்பது போல நடித்து பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு – வாலிபர் கைது..!

கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மனைவி லட்சுமி ( வயது 58) இவர் நேற்று பகலில் அவரது வீட்டை திறந்து போட்டுவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பாண்டியராஜன் (வயது 26) என்பவர் லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். லட்சுமி தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு அழைத்துச் சென்றார். அப்போது பின் தொடர்ந்து சென்ற பாண்டியராஜன் அவரை பிடித்து கீழே தள்ளி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்கு பதிவு செய்து பாண்டியராஜனை கைது செய்தார். இவரிடம் இருந்து 7 பவுன் நகை மீட்கப்பட்டது..