அரசு நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாக்கல்… பிரதமரின் திடீர் முடிவால் கடும் அதிர்ச்சியில் மக்கள்..!!

ந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசு முதலீட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, அதேவேளையில் தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியங்களுக்கும் இது ஜாக்பாட் ஆக மாற்றியுள்ளது. நடுவில் அரசு ஊழியர்கள் தங்களது வேலையைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.பாகிஸ்தான் அரசின் முன்பு நஷ்டமடைந்து வரும் அரசு நிறுவனங்களை மட்டும் தனியார்மயமாக்கத் திட்டமிட்டிருந்தது. ஆனால், தற்போது லாபம் ஈட்டும் நிறுவனங்களையும் தனியார்த் துறைக்கு விற்பனை செய்யும் முடிவை அரசு எடுத்துள்ளது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.
பாகிஸ்தான் அரசின் இந்த திடீர் முடிவுக்கு முக்கியமான காரணம் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடைபெறும் கடன் பேச்சுவார்த்தைகள் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் தனது கடுமையான நிதி நெருக்கடியைச் சமாளிக்க, IMF இடம் இருந்து கடன் பெறுவது மட்டும் தான் ஒரே வழியாகக் கொண்டுள்ளது.பாகிஸ்தான் நாட்டுக்குத் தனது நட்பு நாடுகள் கடன் உதவி அளிப்பதை படிப்படியாகக் குறைத்து வரும் வேளையில் IMF சொல்வதை அப்படியே கேட்கவேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. IMF பொதுவாக, கடன் வழங்குவதற்கு முன்பு, கடன் பெறும் நாடுகளிடம் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறது. இதன் ஒருபகுதியாகப் பாகிஸ்தான் அரசுக்குக் கடன் சுமையைக் குறைப்பதை முக்கியமான கட்டுப்பாடாக வைத்துள்ளது.

அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது மூலம் அரசின் செலவுகளைக் குறைப்பதற்கும், பொருளாதாரத்தை தாராளமயமாக்கவும் உதவும் என பாகிஸ்தான் தீவிரமாக நம்பும் காரணத்தால் அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார்மயமாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அரசின் தனியார்மயமாக்கல் திட்டத்தில் மிகவும் கவனம் பெறுவது பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் (Pakistan International Airlines – PIA) ஆகும். PIA நிறுவனம் பாகிஸ்தானின் மூன்றாவது மிகப்பெரிய நஷ்டமடைந்த பொதுத்துறை நிறுவனமாகும். பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் கடன்களுக்காக மட்டும் மாதம் 11.5 பில்லியன் பாகிஸ்தான் ரூபாய் செலவிட வேண்டியுள்ளது. PIA தனியார்மயமாக்கல் செயல்முறை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும், இந்த செயல்முறை முழுவதும் அதாவது ஏலம் விடுதல் உள்ளிட்ட முக்கிய படிகள் அரசு தொலைக்காட்சி வழியாக நேரலை செய்யப்படும் என்றும் பிரதமர் ஷெரிஃப் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் பிற நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் பணிகளையும் அரசு தொலைக்காட்சி வழியாக நேரலை செய்யப்படும் எனப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் அரசின் இந்த தனியார்மயமாக்கல் நடவடிக்கை சர்ச்சைக்குரியதாக உள்ளது. தனியார்த் துறை நிறுவனங்கள் திறமையாகச் செயல்பட்டு லாபம் ஈட்டக்கூடும் என்றும், இதன் மூலம் அரசின் நிதிச் சுமையைக் குறைக்க முடியும் எனப் பாகிஸ்தான் இறுதி முடிவை எடுத்துள்ளது