மினி லாரியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கடத்தல்.!!

திருவள்ளூர் மாவட்டம் அருகே ஆந்திர மாநில எல்லையில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் மோட்டார் சைக்கிள் மூலம் லாரிகள் மூலமாகவோ கடத்தி வரப்படுகின்றது .இதை அடியோடு ஒழித்து கட்ட வேண்டும் என்று ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு போலீஸ் சோதனைச் சாவடியில் செவ்வாபேட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரத் பாபு தலைமையில் தலைமை காவலர் புருஷோத்தமன் காவலர் பொன்மொழி ஆகியோர் மின்னல் வேகத்தில் வந்த ஒரு மினி லாரியை இரும்பு தடுப்பு போட்டு அதிரடியாக நிறுத்தினார்கள்.

வாகனத்தை ஓட்டி வந்த குற்றவாளி நவீன் குமார்(33) தகப்பனார் பெயர் கங்கன் சோழன் தெரு முத்தமிழ் நகர் திருநின்றவூர் டாட்டா இன்டரா மினி லாரி tn 87e 0974 பின்பக்க கதவை திறந்து பார்த்த போது அங்கு இருந்த v1 டுபாக்கோர் பாக்கெட்டுகள் 10920 விமல் பான் மசாலா 109 பாக்கெட்டுகள் கூல் அப்912 பாக்கெட்டுகள் ஹான்ஸ் 7740 பாக்கெட்டுகள் சுமார் 205 கிலோ கிராம் எடை கொண்ட குட்கா என்ற போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன . குற்றவாளி நவீன் குமார்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்படியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சிவசங்கர் குற்றவாளிக்கு ரூ 50 ஆயிரம் அபராதம் விதித்தார். செவ்வாபேட்டை காவல் நிலையத்திற்கு அதிரடியாக செயல்பட்ட சப் இன்ஸ்பெக்டருக்கும் தலைமை காவலருக்கும் போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்