கோவை அருகே உள்ள வடவள்ளி ,நியூ தில்லைநகர், 8-வது வீதியில் ஒரு வீட்டில் பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக வடவள்ளி போலீசுக்கு தகவல் வந்தது இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக சுந்தரம் வீதியைச் சேர்ந்த சீனிவாசன் ( வயது 37) கிருஷ்ணவேணி ( வயது 65) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்த அழகிகள் இடையர்பாளையம் டி.வி.எஸ். நகர், மகாலட்சுமி ராதாமணி,கீதா ஆகியோர் கைது செய்யப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது..