கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் தரகர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் சிவானந்தா காலனி மும்தாஜ் ( வயது 50 )திருப்பூர் வீரபாண்டி சித்ரா ( வயது 66 )சங்கனூர் கண்ணப்ப நகர் வசந்தி (வயது 45) சென்னை கொடுக்கு பேட்டை சித்தரவதி (வயது40 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..