கோவை ஆவராம்பாளையம் ரோட்டில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் தமிழரசு, சப் இன்ஸ்பெக்டர் நஸ்ரின் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த பியூட்டி பார்லரின் வரவேற்பாளரான தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டியை சேர்ந்த சித்ரா (வயது 24) நேபாளத்தை சேர்ந்த சூப்பர்வைசர் பிரேம்குமார் (வயது 28) நரேஷ் மல்லா ( வயது 42) வங்காள த்தைச் சேர்ந்த பிச்சோளி (வயது 40) மணிப்பூர் ( 40) கிம்னி ( 25) அசாம் வக்கி சின் சிட் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை நடத்தி வந்த கீட்டன் பட்டேல் என்பவர் தலைமறைவாகி வாங்கிவிட்டார்..