கோவை சரவணம்பட்டியில் ஒரு தனியார் கல்லூரி அருகே உள்ள லாட்ஜில் 2 அறைகளை வாடகைக்கு எடுத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பரமன் ஆகியோர் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள செட்டிபாளையத்தைச் சேர்ந்த அசோக் என்ற முருகானந்தம் (வயது 28) சிறுமுகை வெள்ளி குப்பம்பாளையம் பன்னீர்செல்வம் ( வயது 27) ஈச்சனாரி, அம்மன் நகர் செல்வராஜ் (வயது 26 ) மும்பை மசாஜ் அழகிகள் பிரிச்சி (வயது 25)விசாக சவுத்ரி (வயது 21)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.
கோவை லாட்ஜில் விபசாரம் – மும்பை அழகிகள் உட்பட 5 பேர் கைது.!!
