கோவை சுக்கிரார்பேட்டை, ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக ஆர்.எஸ். புரம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது .உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சப் இன்ஸ்பெக்டர் வீரப்பன் ஆகியோர் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மசாஜ் அழகிகள் பாண்டிச்சேரி தமிழரசி ( வயது 22) திருச்சி தேவி ( வயது 23 )ஈரோடு ( வயது 23) பவானி விஷ்ணு பிரியா (வயது 23) ஆகியோர் மீடக்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் மானேஜர் சேலம் சின்ன திருப்பதியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் (வயது 31) கைது செய்யப்பட்டார் . அதன் உரிமையாளர் அரவிந்த் தாட்சன் என்பவரை தேடி வருகிறார்கள்.
மசாஜ் சென்டரில் விபச்சாரம் : மானேஜர் கைது – 4 அழகிகள் மீட்பு.!!
