சிங்காநல்லூரில் விபச்சார விடுதி மூடல் – பெண்கள் உட்பட 8 பேர் கைது..!

கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ஏ.கே.ஜி .நகரில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக சிங்காநல்லூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் முகமத் இமாம் அலி (வயது 30) கோவை புதூர் அபியா பானு ( வயது 20 )ஜெயப்பிரகாஷ் ( வயது 33 )  மதுக்கரை மாலு ( வயது 22) கோவை புதூர் சபீனா ( வயது 34 ) ஒண்டி புதூர் ஸ்ரீதேவி (வயது 21) ,சிங்காநல்லூர் ஜீவா (வயது 30) தாராபுரம் சத்யா ( வயது 19 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விபச்சார விடுதி மூடப்பட்டது..