கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் முதல்தளத்தில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது தெரிய வந்தது . இது தொடர்பாக அங்கிருந்த தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த கீதா ( வயது 49) தேனி மாவட்டம் தாமரைக் குளம்,பெரியகுளத்தை சேர்ந்த வைதீஸ்வரி (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதை நடத்தி வந்த ஜெபின் ,சூர்யா ஆகியோர் தப்பி ஓடி விட்டனர் .இவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்..
கோவை அடுக்குமாடி கட்டிடத்தில் அழகிகளை வைத்து விபச்சாரம் – 2 பெண்கள் கைது..!
