கோவை பெரிய கடை வீதியில்,மணிக்கூண்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் 2 அறைகளில் விபச்சாரம் நடப்பதாக உக்கடம் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி, நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக நிர்மலா என்ற கமலா, இப்ராஹிம் கான், கருப்பசாமி, ஒட்டல் அதிபர் அரவிந்த், மேனேஜர் தாமோதரன், தீபிகா தேவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை ஹோட்டலில் அழகிகளை வைத்து விபச்சாரம் – 6 பேர் மீது வழக்குபதிவு.!!
