வீட்டில் அழகிகளை வைத்து விபச்சாரம் – பெண்கள் உட்பட 3 பேர் கைது..!

கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது 32) மதுரை கரிமேடு அனுஷா (வயது 21) விஜயவாடா நிலாபர் (வயது 30) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..