ராமநாதபுரம் நகராட்சி மற்றும் அமைச்சர் பொன்முடியை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

ராமநாதபுரத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக பராமரித்து சீர் செய்யப்படாததால் பாதாள சாக்கடை நகராட்சிக்குட்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதி முழுவதிலும் வெளியேறி குளம் போல் தேங்கி சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றிற்கு ஆளாகி வருகின்றனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் அதே போன்று

பெண்களை தொடர்ந்து இழிவுடுத்தும் வகையில் கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப்` `பேசியுள்ள விடியா திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து` அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர்` கீர்த்திகா முனியசாமி தலைமையில் ராமநாதபுரம் நகராட்சி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அணியினர் ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு திமுக அரசின் அவலங்களுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியதை தொடர்ந்து பெண் பொன்முடியின் உருவப் படத்தை செருப்பால் அடித்து தங்களின் வேதனையை வெளிப்படுத்தினார்கள். மேலும் தொடர்ந்து பொன்முடியின் உருவ புகைப் படத்தை கீழே போட்டு காலில் மிதித்தனர்.