கோவைபோலீஸ் அதிகாரியை கத்தியால் குத்திய 2 பேருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை…

கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி போத்தனூர் போலீஸ்சப்- இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்துசுற்றி வந்தனர். அப்போது அங்கு 8 பேர் கொண்ட கும்பல் இரு பிரிவினர்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்ததனர். உடனே அவர்களிடம் சென்று பிரசுரங்களை வழங்க கூடாது என்று கூறினார். அதை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து தொடர்ந்து பிரசுரங்கள் விநியோகம் செய்தனர். இதனால்அந்த கும்பலைச் சேர்ந்தவர்களை பிடிக்கமுயன்றார். அதில் 6 பேர் தப்பி ஓடிவிட்டனர்.இதில் கரும்புக்கடையை சேர்ந்த முகமது ரபிக் (வயது 32 )அப்துல் ரகுமான் ( வயது 37) ஆகிய 2 பேரும் சேர்ந்து சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனைகத்தியால் குத்தினர். உடனே அவர்கள் 2 பேரையும் அங்கிருந்த போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் (எண் 7) நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் சாட்சி விசாரணை உட்பட பல்வேறு கட்ட விசாரணைகள் முடிவடைந்தன. இதையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது .வழக்கை விசாரித்த நீதிபதி சி பி வேதகிரி, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரனை கத்தியால் குத்திய வழக்கில் முகமது ரபிக்,அப்துல் ரகுமான் ஆகிய 2 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும் தலா ரூ 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அத்துடன் அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார் .அரசு தரப்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி வாதாடினார்.