கோவை மருத்துவமனையில் வேன்திருட்டு…

ஈரோடு மாவட்டம், பவானி சோமசுந்தரபுரத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் மவுலி சந்திரன் (வயது 27)இவர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தன் உறவினரை பார்க்க ஆம்னி வேனில் வந்தார். மருத்துவமனை பார்க்கிங்கில் வேனைநிறுத்தி இருந்தார். மருத்துவமனைக்கு சென்று விட்டு வந்து பார்க்கும்போது வேனை காணவில்லை. யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து மவுலிச்சந்திரன் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.