சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர் அனுராதா வயது 47 . செக்டார் முதல் தெருவில் வாடகை வீட்டில் ரசீது கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மகன் ரமணிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. ரமணி ஆத்திரமடைந்து குடியிருக்கும் அனுராதாவையும் அவரது தாயாரையும் அடித்து உதைத்தார் .வீட்டில் இருந்த ரொக்க பணத்தையும் ,சாமான்களையும் கால்வாயில் தூக்கி வீசினர். இது குறித்து கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் காவல்துறை தலைமை இயக்குனர் சென்னை மாநகர காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனையடுத்து சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அனுராதா புகாரில் கூறியுள்ளார்..