சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் ஆலப்பு ழா எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 10 பெட்டியில் படுக்கை எண் 15 இல் மணிகண்டன் வயது 38 தகப்பனார் பெயர் ராஜமாணிக்கம் கொளத்தூர் சென்னை என்பவரும் அவருடைய குடும்பத்தினரும் பயணம் செய்து வந்தனர். அப்போது ரயில் ஈரோட்டிற்கும் திருப்பூருக்கும் இடையில் செல்லும்போது எஸ் 10 பெட்டியில் பயணம் செய்து வந்த இளைஞர்கள் குடிபோதையில் சிகரெட் புகைத்து கொண்டும் கூச்சலுடன் அநாகரிகமாகவும் பேசிக் கொண்டும் சக ரயில் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் விதமாக நடந்து கொண்டவர்களை குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் இருக்கும் இடத்தில் ஏன் சிகரெட் பிடிக்கிறீர்கள் எனக் கேட்டால் மணிகண்டனை அநாகரிகமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும் பயங்கரமாக அடித்து உதைத்துள்ளனர். ரயில் திருப்பூர் நிலையத்திற்கு வந்ததும் குற்றவாளிகள் இறங்கி தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் குறித்து காணொளியில் சமூக வலைத்தளங்களில்
வேகமாக பரவியது. இச்சம்பவம் திருப்பூர் ரயில்வே போலீசில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ரயில்வே போலீஸ் ஏடிஜிபி வனிதா குற்றவாளிகளை கைது செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்தார். கோயம்புத்தூர் ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஸ்மின் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் போத்தனூர் தனலட்சுமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் கார் முகிலன் ஆகியோர் அடங்கிய இரண்டு தனிப்படையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தணர். அசோக் வயது 18 தகப்பனார் பெயர் முத்துராஜ் பாளையக்காடு திருப்பூர் 2. பவன் குமார் வயது 17 தகப்பனார் பெயர் சுப்பிரமணி திருப்பூர் இலஞ்சிறார் இவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் இளம் சிறாரை சிறுவர் இல்லத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். சுடலை ராஜ் வயது 18 தகப்பனார் பெயர் சுப்ரமணியன் மன்னாரை திருப்பூர் 2. கரன் வயது 23 தகப்பனார் பெயர் கருணாநிதி கோல்டன் நகர் திருப்பூர் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக புகார் செய்ய வாட்ஸ்அப் நம்பர் 99625 00500 நம்பரை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்..