கோவையில் தடையை மீறி பேரணி – அண்ணாமலை உட்பட 917 பேர் கைது..!

கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு குண்டு வெடித்தது இதில் 58 பேர் உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர் இதுதொடர்பாக அல்- உம்மா இயக்க தலைவர் பாஷா உட்பட பலரை போலீசார் கைது செய்தனர் .இதில் ஆயுள் தண்டனை பெற்ற பாஷா 25 ஆண்டுகளாக கோவை சிறையில் இருந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக பரோலில் வந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த 16ஆம் தேதி மரணம் அடைந்தார். அவருடைய உடல் உக்கடம் அன்பு நதரில்பூ மார்க்கெட் பகுதியில் உள்ள கபரிஸ்தான் வரை கடந்த 17ஆம் தேதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதை கண்டித்து பாஜக சார்பில் கருப்பு தின பேரணி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலில் உக்கடம் பகுதியில் பேரணி நடத்த அனுமதி கேட்டபோது போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதைடுத்து காந்திபுரம் வி கே மேனன் சாலையில் பேரணி நடந்தது. தெற்கு மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் தலைமை தாங்கினார் .இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், விஷ்வ இந்து பரிஷத் கோவை கோட்ட செயலாளர் சிவலிங்கம், வானதி சீனிவாசன்எம் எல் ஏ ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த பேரணியில் மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் .பின்னர் பேரணி தொடங்கியது. இதில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்புகளைசேர்ந்த தொண்டர்கள் அண்ணாமலை தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர் .அத்துடன் பலர் கண்டன வாசகங்கள் அடங்கி பதாகைகளை கையில் ஏந்தியபடியும் சென்றனர் .இந்த பேரணிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பதால் பேரணியில் கலந்து கொண்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மாநில தலைவர் அண்ணாமலை உட்பட கலந்து கொண்ட பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட மொத்தம் 917 பேர் கைது செய்தனர். அவர்கள் வேனில் ஏற்றிச் செல்லப்பட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். இரவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்..