ராமநாதபுரம் வட்டாட்சியர் புதுவலசை கிராமத்தில் கள ஆய்வு..!

இராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் உள்வட்டம், புதுவலசையில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருவதாகவும், அதற்கு பட்டா வழங்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையொட்டி, கள ஆய்வு செய்ய ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதான் மாணிக்கத்துக்கு மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டார். இதனடிப்படையில் புதுவலசை கடற்கரை சத்திரம் பகுதியில் வட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்பொழுது தேர்போகி வருவாய் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்தில் 4 கம்புகளுடன் கூடிய கற்றுச்சுவர் அற்ற மேற்கூரை அமைத்து ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டது. மனுவில் தெரிவித்தது. போல் அங்கு குடும்பத்தினருடன் வசிப்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. சட்ட ஒழுங்கு சூழல் நிலையை கருத்தில் கொண்டு அங்கு ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்க இயலாது என ராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம் தெரிவித்துள்ளார்.