கோவை மின் பகிர்மான வட்டம் ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மற்றும் விரிவாக்க பணி நடைபெறுகிறது. இதையொட்டி நாளை ( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாமஸ் பார்க், காமராஜர் ரோடு, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி ரோடு நெடுஞ்சாலை துறை அலுவலகம் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை ,புலிய குளம் ரோடு, ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர் ,சுசிலா நகர், ருக்மணி நகர், பாரதிநகர் 1 முதல் 6-வது வீதி வரை பாப்பம்மாள் லேஅவுட், பார்க் டவுன், கருணாநிதி நகர் ஆகிய பகுதியில் நாளை (சனிக்கிழமை) மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சிவதாஸ் தெரிவித்துள்ளார்..
ராமநாதபுரம் – ரேஸ்கோர்ஸ் பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்..!
