இராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் அமைந்துள்ள ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி மாணவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் அவர்களை பல போட்டிகளில் பங்கு பெறச் செய்து ஊக்கப்படுத்தி வருகின்றனர். மேலும் அகாடெமியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ரூபிக் கியூபில் பல வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ,வேர்ல்ட் வைடு புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஜாக்கி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும் ராபா புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஆகிய ரெக்கார்ட்ஸ் போட்டிகளில் கார்மிகா, விதுன் கிரித்விக் , நிவ்யா ஹனு ஶ்ரீ, பிரதித்யா, விபாஸ், மானசா, தானியா சாய்னா, பியான்ஸ், நிதர்சன் சாய், ஆதிக்சன், பிரனவ், ஹரிஷ், மகிலினி, துவாரகேஷ், பிரய்டன், சன்ஷிகா, மனோஜ் குமார், மஹபுப் இஷாக், ஆகிய மாணவர்களை பரிசு சான்றிதழ் பெற்று சாதனையாளர்களாக மாற்றியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பரிசு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு பாராட்டி ஊக்கப்படுத்தினார்.
இராமநாதபுரம் ஸ்பார்க்லிங் டோபஸ் அகாடெமி பள்ளி மாணவர்கள் சாதனை- மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பாராட்டு.!!
