13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் – மேஸ்திரிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை..!

வேலூர் மாவட்டம், தொரப்பாடியை சேர்ந்தவர் வெற்றிவேல் ( வயது 33) கட்டிடமேஸ்திரி. இவர் தன்னுடன் வேலை பார்க்கும் பெண்ணின் 13 வயது மகளிடம் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் கோவை கே .ஜி . சாவடி பகுதியில் அறை எடுத்து தங்கி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் குடிபோதையில் அந்த சிறுமியை தாக்கியும் உள்ளார் .இதனால் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, கொடுமைப்படுத்தியதாக வெற்றி வேல்மீது கே.ஜி. சாவடி போலீசில் புகார் செய்தார் .அதன் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து வெற்றிவேலை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது.வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்த வெற்றிவேலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10, ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு மூலம் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டார்.