தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய் துறையின் கோவை மேற்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு மரிய முத்து மேற்பார்வையில் போலீசார் மதுக்கரை ஆர்.டி.ஓ. சோதனை சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுசிலர் 15 ஆயிரத்து 200 கிலோ ரேஷன் அரிசியை கேரளாவில் விற்பனை செய்வதற்காக லாரியில் கடத்திச் சென்றனர். இதை அறிந்த போலீசார் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கோவை சுகுணாபுரத்தைச் சேர்ந்த பெரோஸ் கான் ( வயது 35) புதுச்சேரியை சேர்ந்த அய்யப்ப குமார் (வயது 41) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.. இது யடுத்து அவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் கோவை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அந்த 2 பேரையும்குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பவன் குமார் உத்தரவிட்டார். அதற்கான நகல் கோவை மத்திய சிறையில் உள்ள பெரோஸ்கான், அய்யப்பகுமார் ஆகியோருக்கு நேற்று வழங்கப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்தல் – 2 பேர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்..!
