கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 20 11 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆனால் போலீசார் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது . இதனால் குனியமுத்தூர் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான நசாருதீன் .(வயது 48) என்பவரை அணுகினார் . அவர் போலீசில் சொல்லி நடவடிக்கை எடுக்க வைப்பதாக கூறினார். பின்னர் 2 பேரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டனர். இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி பேசி தங்களது நட்பை வளர்த்தனர். அப்போது அந்த பெண் தனது கணவரிடமிருந்து தனக்கு விவாகரத்து பெற்றுத் தரும்படி கூறினார் .அதற்கு அவர் ஏற்பாடு செய்வதாக கூறினார். இதனால் 2 பேரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர் .இந்த நிலையில் கடந்த 20 17 -ஆம் ஆண்டு முதல் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகினார்கள். அப்போது நசாரூதின் அந்தப் பெண்ணிடம் நான் உன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண் 4 முறை கர்ப்பமானதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை வற்புறுத்தி அந்த கர்ப்பத்தை நசாருதீன் கலைத்தாராம் .இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நசாரு தீனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மதம் மாறும் படி கூறியுள்ளார் .உடனே அந்த பெண்ணும் மதம் மாறியதாக தெரிகிறது. ஆனாலும் அவர் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து அந்தப் .பெண் கோவை மாநகர தெற்கு பகுதி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினார்கள் . அதில் நசாருதீன் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்து விட்டு திருமணம் செய்ய மறுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நசாருதீன் மீது ஏமாற்றுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், உள்ளிட்ட 5 பிரிவின்கள் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..
திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம் – ரியல் எஸ்டேட் அதிபர் கைது..!
