கடனில் வாங்கிய இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்த நபரிடம் வாகனத்தை கேட்ட நிதி நிறுவனத்திற்கு, மிரட்டல் விடுக்கும் செய்தியாளர்
கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்களுக்கு லோன் வழங்கும் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு டாஸ்மார்க் பாரில் ஊழியராக வேலை பார்க்கும் கலையரசன் என்பவர் இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு கடன் வாங்கியுள்ளார். தவணைத்தொகையை கடந்த நான்கு மாதங்களாக செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் அவர் வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டில் இரண்டு சக்கர வாகனம் இல்லை. மேலும் அவரிடம் இது குறித்து கேட்டபோது அந்த இரு சக்கர வாகனத்தை அடமானம் வைத்ததாக தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதி நிறுவனத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளனர். இந்நிலையில் நிதி நிறுவனத்தில் தன்னை அழைத்ததாக செய்தியாளர் ஒருவரிடம் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து, அங்கு வந்த செய்தியாளர் அந்த நிதி நிறுவனத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எதற்காக அவரை அழைத்து வந்து உள்ளீர்கள் என்று கேட்டுள்ளனர். மேலும் கலையரசன் நாங்கள் அந்த நிதி நிறுவனத்தில் பேசிக்கொள்கிறோம் என்றும் நீங்கள் இங்கு இருந்து செல்லுங்கள் என்று கூறியுள்ளார். அந்த செய்தியாளர் நான் வந்ததற்கு ஏதாவது பண்ணுங்கள் என்று கூறியுள்ளார். அங்கிருந்த நிதி நிறுவன ஊழியர்கள் காவல் நிலையம் சென்று பேசிக்கொள்ளலாம் என கூறியதற்கு நீண்ட நேரமாக அங்கு நின்று அவர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து செல்போன் வீடியோ வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியர் நிருபர் என்ற போர்வையில் மிரட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை விட்டிருந்த நிலையிலும், தொடர்ந்து கோவையில் நிருபர் என்ற போர்வையில் மிரட்டும் செயல் அதிகரித்து வருபவது குறிப்பிடத்தக்கது.