கோவை எம்.என்..ஜி.வீதியில் நகை பட்டறை நடத்தி வருபவர் பீபாஸ் குச்சத்(வயது 35) இவரது தங்கபட்டறையில் குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திருப்பதாக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரிவு அலுவலகத்துக்கு தகவல் வந்தது . அதிகாரி விஜயகுமார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ரின்காஷ் குச்சனய் (வயது 15 ) என்ற சிறுவன் பணிக்கு அமர்த்தப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிறுவன் மீட்கப்பட்டான். இது தொடர்பாக நகை பட்டறை அதிபர் பீபாஸ் குச்சத்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..