கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நஜ்முதீன் ( வயது 61) இவர் உக்கடம் கிரீன் கார்டன் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஆவார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் தற்போதைய தலைவர் முகமது முஸ்தபா (வயது 52) சங்கத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.40 ஆயிரத்தை கேட்டாராம். அப்போது ஏற்பட்ட தகராறில் முகமது முஸ்தபா முன்னாள் தலைவர் நஜ்முதீனை தகாத வார்த்தைகளால் பேசி கீழே பிடித்து தள்ளி கொலை மிரட்டல் விடுத்தாராம் . இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உக்கடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப் இன்ஸ்பெக்டர் அஜய் சர்மா வழக்கு பதிவு செய்து கிரீன் கார்டன் தலைவர் முகமத் முஸ்தபாவை கைது செய்தார். இவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
குடியிருப்போர் சங்க முன்னாள் தலைவரை தாக்கி கொலை மிரட்டல்..!
