கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள ஒடைய குளம், பாறை பதியில் உள்ள ஒரு தோட்டத்தில்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆனைமலை போலீசுக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்( வயது 32) ஷேக் முஸ்தபா ( வயது 38)சந்திரசேகர் (வயது 34) ஆனந்தகுமார் ( வயது 50) சுந்தரம் ( வயது 79 )சுரேஷ் ( வயது 54)தர்மலிங்கம் ( வயது 37) சின்ராஜ் (வயது 30)பரமசிவம் ( வயது49) பாலாஜி ( வயது 37) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ 50 ஆயிரத்து 40 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 இருசக்கர வாகனங்களும் கைப்பற்றப்பட்டது.
தோட்டத்தில் பணம் வைத்து சீட்டாட்டம் இருசக்கர வாகனங்கள் – பணம் பறிமுதல்…
