கூட்டணிக் கட்சிகளை வளா்ப்பதே அதிமுகவின் நோக்கம் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா்…

விழுப்புரத்தில் புரட்சி பாரதம் கட்சி சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற ‘மனிதம் காப்போம்’ மாநாட்டில் அவா் ஆற்றிய சிறப்புரை: உடலும், உயிரும்போல அதிமுகவும், புரட்சி பாரதம் கட்சியும் உள்ளன. எங்களை யாராலும் பிரிக்க முடியாது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்வில் ஏற்றம் பெறுவதில் எவ்வித இடா்பாடும் கூடாது என்பதே அதிமுகவின் நோக்கம். மக்களவைத் தோதலுக்கு முன்னோட்டமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதிமுக கூட்டணிக்கு பல கட்சிகள் வரவுள்ளன. அதில் புரட்சி பாரதம் கட்சி முதல் கட்சியாக உள்ளது. திமுக கூட்டணி சுயநல கூட்டணி. ஆனால், அதிமுக தலைமையிலான கூட்டணி பொதுநலன் சாா்ந்த கூட்டணி.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காக கல்வியில் புரட்சி, மறுமலா்ச்சியை ஏற்படுத்தியவா் ஜெயலலிதா. கல்விக்கு முன்னுரிமை அளித்து அதிக நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்றினாா். ‘தாலிக்குத் தங்கம்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் உதவித் தொகையை வழங்கினாா் ஜெயலலிதா. ஆனால், திமுக அரசு அமைந்தபிறகு அதிமுக அரசு அமல்படுத்திய திட்டங்கள் நிறுத்தப்பட்டன. இதுவே திமுக அரசின் சாதனை.

கரோனா தொற்று காலத்தில் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டைக்கு தலா ரூ.2,500 வழங்கினோம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 21 வகையான பொருள்களை வழங்குவதாக அறிவித்தனா். ஆனால், அந்தப் பொருள்களின் தரம் அனைவருக்கும் தெரியும். அதிமுக ஆட்சியில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பே முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மக்களுக்கு போதிய அறிவிப்புகள் வெளியிடப்படும். ஆனால், மிக்ஜாம் புயலின்போது திமுக அரசு செயலற்ாக இருந்தது. சட்டப்பேரவைத் தோதலின்போது 520 வாக்குறுதிகளை திமுக அறிவித்தது. அதில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு பலவற்றை கிடப்பில் போட்டுவிட்டனா். கூட்டணிக் கட்சிகளை நெருக்குவதே திமுகவின் நோக்கம். ஆனால், கூட்டணிக் கட்சிகளை வளா்ப்பதே அதிமுகவின் நோக்கம். வருகிற மக்களவைத் தோதலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். இதற்கு தொண்டா்கள் களப் பணியாற்ற வேண்டும் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.