கோவில் குருக்களிடம் ரூ 12 லட்சம் மோசடி…

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெல்லாதியில் அருள்மிகு சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு குருக்களாக வேலை பார்த்து வருபவர் முருகேசன் (வயது 40)இந்த கோவிலுக்கு வீரபாண்டி பிரிவை சேர்ந்த சங்கர் என்ற சிவா (வயது 38)வழக்கமாக சாமி கும்பிட வருவார். அப்போது குருக்கள் முருகேசனிடம் அறிமுகம் ஆனார்.கார் வியாபாரம் செய்வதாகவும் மாத தவணையில் பணம் செலுத்தினால் ,கூடுதல் பணமோ? அல்லதுகார் கொடுப்பதாகவும் கூறினார் .இதை யடுத்து முருகேசன் பல தவணைகளில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தார்.அந்த பணத்தை சங்கர் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து குருக்கள் முருகேசன் காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து சங்கர் என்ற சிவாவை நேற்று கைது செய்தார். இவர் மீது மோசடி உட்பட இரு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..