வக்கீல்வீட்டில் ரூ.2.5 லட்சம்திருட்டு. வேலைக்காரபெண் மீது புகார்…

கோவை பீளமேடு, சவுரிபாளையம்.,பகுதியை சேர்ந்தவர் ஜெயசுப்பிரமணியன் (வயது 63) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார் .இவரது வீட்டில்மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் தங்கி இருந்து வீட்டு வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த ரூ 5 லட்சத்தை காணவில்லை.பிறகு அங்கு வேலை செய்து வந்த தமிழ்ச்செல்வி உறவினர் வீட்டுக்கு தேனிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் வக்கீல் ஜெயசுப்பிரமணியன் பீளமேடு போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த தமிழ்ச்செல்வி மீது சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் .போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.