குட்கா விற்ற முதியவர் சிறையில் அடைப்பு…

கோவை அருகே உள்ளவெள்ளலூர் அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் அப்துல் காதர் ( வயது 72 )இவரது பெட்டி கடையில் போத்தனூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 5347.25 கிராம் குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அப்துல்காதர்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.