திருவேற்காடு அன்பு நகரில் வசிக்கும் பரமேஸ்வரி வயது 39 இவரிடம் சதாசிவம் என்பவன் தமிழ்நாட்டில் பிரபலம் வாய்ந்த டிவிஎஸ் கம்பெனியில் வேலை செய்வதாகவும் இவனுடைய மனைவி சௌபாக்கியம் இருவரும் கூட்டாக சேர்ந்து ஏலச்சீட்டு தீபாவளி மளிகை பொருட்கள் பண்ட் சீட்டை நடத்தி சுமார் 20 பேரிடம் 48 லட்சத்தை வசூலித்து விட்டு பெங்களூர் டிவிஎஸ் சோளிங்கர் பாடி ஆகிய பகுதிகளில் உள்ள டிவிஎஸ் கம்பெனி யில் உரிமையாளர்களிடம் நல்ல பேரை வாங்கி விட்டேன் என சொல்லி ஏமாற்றிவிட்டு 2019 ஆம் ஆண்டு யாருக்கும் எந்த பொருட்களையும் கொடுக்காமல் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் நள்ளிரவோடு வீட்டை காலி செய்து விட்டு ஓடிவிட்டான் இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி வழக்குப்பதிந்து தலை மறைவாக மாறுவேடத்தில் திரிந்த சதாசிவத்தை கைது செய்தனர் அவன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் ஐந்து ஆண்டு காலமாக என்னை பிடித்து விட்டீர்களே உங்களை தனியாக கவனிக்கிறேன் என்னை விட்டு விடுங்களேன் என கதறி அழுதான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷினி தான் நேர்மைக்கு பாடுபடுபவள் என போலீஸ் பாணியில் பேசினார் கைது செய்யப்பட்ட சதாசிவம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.