பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது பைக் பாய்ந்து 2பேர் பலி…

கோவை-பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது நேற்று வேகமாக வந்த ஒரு பைக்திடீரென்று நிலைதடுமாறு பாய்ந்தது.இதில் ரோட்டில் நின்று கொண்டிருந்த கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள மன்னார்காட்டை சேர்ந்த விஜயன் ( வயது 38) பாலக்காடு முதுவல்லியை சேர்ந்த சதீஷ் ( வயது 32)பைக் ஒட்டி வந்த பொள்ளாச்சி ஒக்கிலிபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) பின்னால் இருந்து வந்த அதே ஊரைச் சேர்ந்த ஜோதி கிருஷ்ணன் (வயது 22) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயன், கார்த்திக் ஆகியோர் இறந்தனர். ஜோதி கிருஷ்ணன், சுதீஷ் ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் இது குறித்து வடக்கி பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.