நீலகிரி உதகை அரசு கலைக் கல்லூரியில் சமத்துவ பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி முதல்வர் தமிழ் துறை தலைவர் வாகிதா தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, நிகழ்ச்சியில் அனைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் இணைந்து சமத்துவ பொங்கல் பண்டிகை கொண்டாட ஏற்பாடுகள் செய்திருந்தனர் ,இன்று நடைபெற்ற சமத்துவ பொங்கல் பண்டிகை மத வேறுபாடு என்று கொண்டாட்டத்தில் அரசு கலைக் கல்லூரியை சார்ந்த 19 துறை மாணவ மாணவிகள் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அலங்கரித்து வைத்திருந்தனர், ஒவ்வொரு துறையை சார்ந்த மாணவ மாணவிகள் கோலமிட்டு கரும்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஒற்றுமையோடு இணைந்து பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவுபடுத்தும் விதமாகவும் இயற்கை வளம் அழியாத ஒன்று என்பதை முன்னோர்கள் வழிகாட்டிய முறையில் மண் பானையில் அரிசி பொங்கல் செய்து பொங்க வைத்து கைத்தட்டி பொங்கலோ பொங்கல் என்று வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தனர், இந்தப் பொங்கல் விழாவிற்கு வருகை தந்த கல்லூரி மாணவ மாணவிகள் புத்தாடை அணிந்து வேட்டி சேலை உடுத்தி பாரம்பரிய பண்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை காட்டும் விதமாக இந்தப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு கல்லூரி ஆசிரியர்கள் மாணவ மாணவிகளுக்கு பலவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது, இதில் பொங்கல் சிறப்பு சமையல், சிறப்பான அலங்காரம் செய்த மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது, இதில் திரளான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு உற்சாகத்தில் மகிழ்ந்தனர், மற்றும் பொங்கல் விழாவில் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து மதத்தை சார்ந்த மாணவ மாணவிகள் ஒன்று கூடி நடனமாடி மகிழ்ந்தனர், பொங்கல் விழா நிறைவாக அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டு பொங்கலோ பொங்கல் என்று சுவைத்து விழா நிறைவடைந்தது