கோவையில் பிளஸ் 2 மாணவி மாயம்…

கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது..இது நாளடைவில் காதலாக மாறியது. இதற்கு மாணவியின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகிறார்கள்.