கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

கோவையில் ஆற்று மணல் கடத்தல்: செல்போன் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

கோவையின் புறநகர் பகுதியான நல்லூர்வயல் காருண்யா அருகே உள்ள சப்பானிமடை கிராமத்தில் சிறு துளி அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அந்த தோட்டத்தில் இருந்து பெருமாள் கோயில் பதி பண்ணை தோட்டத்திற்கு 50 க்கும் மேற்பட்ட லாரிகளில் ஆற்று மணல் எடுத்துச் செல்லப்படுதாக தகவல் கசிந்தது. இந்த தகவலை அறிந்து வனிதா மோகன் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கே ஆற்றை திசை மாற்றி நூற்றுக் கணக்கான லோடு ஆற்று மணல்கள் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டது தெரியவந்து உள்ளது. இந்த தகவலை காவல் நிலையத்திற்கும் கிராம நிர்வாக அலுவலருக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. இந்த நிலையில் வரும் வியாழன் (டிசம்பர் 1) அன்று இந்து முன்னணி சார்பாக மாநில தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்.