திக்கணஞ்ஜாடு, வள்ளோடு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், அவரது மகன் சபீஷ் (வயது 20) இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார் .வழியாம் பாளையத்தில் வாடகை வீட்டில் தங்கி உள்ளார் .இவர் செல்போனில் திருநங்கைகளுக்கு உரிய பிரத்யேக செயலி வைத்திருந்தார்.அதில் தொடர்பு கொண்ட 3 பேர் நேற்று இரவில் அவரை சத்தி ரோடு- கிரணத்தம் ரோடு சந்திப்பு அருகே வருமாறு அழைத்தனர் . இவர் தனது பைக்கில் சென்றார். அங்கிருந்த நின்று கொண்டிருந்த 3 பேர் இவரை தாக்கி செல்போன், பணம் ரூ.51,500 கால் பவுன் தங்க மோதிரம், பைக் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் .இது குறித்து சபீஷ் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை தேடி வருகிறார்கள்..
திருநங்கை போல் நடித்து கோவை கல்லூரி மாணவரிடம் பணம், பைக், தங்க மோதிரம் கொள்ளை..!
