கோவை உக்கடம் ,புல்லுக்காடு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்அப்துல்லா ( வயது 37 ) தச்சு தொழிலாளி. நேற்று இவர் தெலுங்கு பாளையம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபர் இவரிடம் ” லிப்ட் ” கேட்டார். அவரை பின்னால் ஏற்றிக்கொண்டு அப்துல் கலாம் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அப்துல்லாவின் கழுத்தில் கத்தியை வைத்து மறைவான இடத்துக்கு போகச் சொன்னார் .பின்னர் அவர் அணிந்திருந்த ஒரு பவுன் செயின், ஒரு செல்போன், மற்றும் அவரது இருசக்கர வாகனம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு அந்த வாலிபர் அந்த வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார் .இது குறித்து அப்துல்லா செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து செல்வபுரம் ,தெற்கு அவுசிங் யூனிட்டைச் சேர்ந்த சாகுல் அமீது மகன் அப்துல் கலாம் ( வயது 26) என்பவரை கைது செய்தார். இவர் ரோடு மேனாக வேலை பார்த்து வந்தார். இவரிடமிருந்து செல்போன், செயின் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது..
பைக்கில் லிப்ட் கேட்டு நடித்து தொழிலாளியிடம் கத்தி முனையில் கொள்ளை.!!
