கோவை வங்கியில் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி..!!

கோவை கணபதி சத்தி ரோட்டில் உள்ள லட்சுமிபுரத்தில் கத்தோலிக் சிரியன் வங்கி உள்ளது .இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆ சாமிகள் வங்கியின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைக்க முயற்சி செய்துள்ளனர். உடைக்க முடியாததால் தப்பி ஓடிவிட்டனர் . இது குறித்து கிளை மேனேஜர் பாலாஜி ரத்தினபுரி போலீசில் புகார் செய்துள்ளார்.சப் இன்ஸ்பெக்டர் பார்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.