துணிக்கடையில் மேற்கூரை உடைத்து துணிகர கொள்ளை..!

கோவை பீளமேடு,மாசாத்தி வீதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 41) நியூ சித்தாபுதூர், ஆவாரம்பாளையம் ரோட்டில் பேஷன் துணிக்கடை நடத்தி வருகிறார் . நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த பேண்ட் , சட்டைகள், கோட், போன்ற ஆடைகள் திருட்டு போனது தெரியவந்தது. இவைகளின் மதிப்பு ரூ 32, ஆயிரம் இருக்கும். இது குறித்து பாலகிருஷ்ணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.