ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம், முல்லை நகர், வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 48 )நேற்று இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற தனது மாமியாருடன் ஈரோட்டில் இருந்து ரயிலில் கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்திலிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்றார். பஸ் ஸ்டாண்டில் இறங்கி பார்த்த போது கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலி செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடிவிட்டனர் . இது குறித்து ராஜேஸ்வரி காட்டூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 7 பவுன் தாலி செயின் கொள்ளை..!
