ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் ஆடு மாடு அடைப்பது போல் அடைத்து வைத்து வாக்களிக்க வைப்பது மிக பெரிய ஜனநாயக படுகொலை என்பதை கண்டித்தும்.விலை வாசி உயர்வு,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு,தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது,12 தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது , அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் போடுவதை கண்டித்தும்,அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய அமுல்படுத்தவில்லை உள்ளிட்டவற்றை கண்டித்தும் நாங்கள் வெளிநடப்பு செய்தோம்..
23 மாத ஆட்சி காலத்தில் திமுக அரசு மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்த போதும் சொத்து வரி,மின் கட்டணம், பால் விலை உள்ளிட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான் மக்களுக்கு இவர்கள் அளித்த பரிசு என மக்கள் பார்க்கிறார்கள். இதுவரை 1.5 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள்..இந்த ஆண்டு 91 ஆயிரம் கோடி கடன் வாங்குவதாக கூறுகிறார்கள். 1.5 லட்சம் கோடி கடன் வாங்கியிருந்தாலும் திட்டங்கள் அறிவிக்க பட்டுள்ளது.ஆனால் திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை எந்த திட்டமும் நடைமுறை படுத்தவில்லை.
இன்று ஜி எஸ் டி வரி,பத்திர பதிவு வருவாய்,பெட்ரோல் டீசல் வருவாய்,சாலை வரி உள்ளிட்ட அனைத்து வரி வருவாய்க்களும் உயர்ந்திருக்கும் பட்சத்தில் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இருந்திருக்க வேண்டும்.ஆனால் கடந்த ஆட்சியில் இருந்த வருவாய் பாற்றகுறை 62 ஆயிரத்தில் இருந்து 2 ஆண்டுகளில் 30 ஆயிரம் குறைத்திருப்பதாக சொல்வது வேடிக்கையாக உள்ளது குற்றச்சாட்டு…
எங்கள் ஆட்சி காலத்தில் கொரோனா தொற்று காலத்தில் தொழில்சாலைகள் அடைக்கப்பட்டிருந்தது,வரி வருவாய் இல்லை அரசாங்கத்திற்கு வரும் வருவாய் முற்றிலும் நின்று இருந்தது.வருவாய்க்கு அதிகமாக செலவு செய்யப்பட்டது. நாங்கள் ஆட்சியில் இருந்த போது கொரோனா சமயத்தில் ஒரு புறம் வருவாய் இழப்பு ,மறுபுறம் செலவு அதிகரிப்பு அதையும் இதையும் ஒப்படுவதை ஏற்று கொள்ள முடியாது என கூறினார்.
திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தற்போது அனைத்து வகையிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது..செலவு குறைந்துள்ளது. அதே நேரம் பற்றாகுறை இன்னும் உள்ளது ஏன் என கேள்வி எழுப்பினார்.
நிதி பற்றாக்குறையை ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் இடம் பெறவில்லை என கூறியவர் மக்களை ஏமாற்றும் அரசாக திகழ்கிறது என குற்றம் சாட்டினார்.
ஆட்சி பொறுப்பேற்று இரண்டு வருடங்கள் ஆகி விட்டது..கடன் வாங்கமல் இந்த அரசு நடைபெறவில்லை..இந்த விடியா திமுக அரசு கடன் வாங்கும் அரசாக தான் உள்ளது என விமர்சித்தார்.சட்ட போராட்டங்கள் நடத்துவது தான் நீட் தேர்வு ரகசியம் என உதயநிதி ஸ்டாலின் கூறுகிறார்.அதை நாங்கள் செய்யவில்லையா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என்று கூறினார்.ஆதி திராவிட மக்களுக்கு சென்ற ஆண்டு வழங்கிய நிதியை விட இந்த ஆண்டு குறைத்துள்ளார்கள் இது கண்டிக்க தக்கது. கொலை கொல்லைகளை அரசு கட்டுப்படுதத்வில்லை..போதை பொருட்களை பயன்படுத்துவதை அரசு குறைக்க வில்லை.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டது.
மகளிருக்கு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறினார்கள் ஆனால் தற்போது தகுதியின் அடிப்படையில் தான் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று கூறுகிறீர்கள்.என்ன அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி அதை தெரிவிக்கவே இல்லை என கூறினார். மகளிருக்கு தகுதியின் அடிப்படையில் உரிமை தொகை வழங்குவதாக கூறுகிறார்கள் என்ன அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்ய இருக்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார். ஒவ்வொரு முறையும் நிதிநிலை புத்தகம் வழங்கப்படும் ஆனால் இந்த முறை எங்களுக்கு வழங்கப்பட வில்லை.
மக்களை ஏமாற்றும் நிதிநிலை அறிக்கையாக இதை நாங்கள் பார்க்கிறோம் என கூறியவர் ஏச்சு பிழைக்கும் தொழில் சரிதானா என்ற எம் ஜி ஆர் பாடலை சுட்டியகாட்டியவர் மக்களை ஏமாற்றி பிழைக்கும் திமுகவின் மூன்றாவது நிதிநிலை அறிக்கை ஒரு மின் மினி பூச்சாக பார்க்கிறோம்.நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எந்த வெளிச்சத்தையும் இது தராது..இது ஓர் காணல் நீர் என கூறிய எடப்பாடி மக்களின் தாகத்தை இந்த நிதிநிலை அறிக்கை தீர்க்காது*என கூறினார் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி உள்ளார்கள்.தற்போது வரி வருவாய் அதிகரித்து வருகிறது. பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக இருந்திருக்க வேண்டும் என கருத்து..