சென்னை:மீன் பிடி படகில் கடத்த முயன்ற 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலைகளை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஐ.சி.ஜி. வஜ்ரா ரோந்துக் கப்பல் மன்னார்வளைகுடா கடலில் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது.
சர்வதேச கடல் எல்லை பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த போது இந்திய மீன்படி படகை சோதனை செய்த போது தெண்டு இலைகள் எனும் பீடி இலைகள் கடத்த முயன்றது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான 3.5 டன் பீடி இலைகள் உடைய 108 மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மீன்பிடி படகு சிறை பிடிக்கப்பட்டு துாத்துக்குடி துறைமுகத்திற்கு இழுத்து வரப்பட்டன.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு நபர்களையும் படகையும் மேல் நடவடிக்கைகளுக்காக உள்ளூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.