கோவை ஆர். எஸ். புரம் .கிழக்கு பெரியசாமி ரோட்டில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருபவர் விக்னேஷ் (வயது 31) இவரது ஹோட்டலில் கோபி கிருஷ்ணன் என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டல் பணம் ரூ 2 லட்சத்து 65 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ் ஆர். எஸ் .புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் கோபி கிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்..