கோவை ராமநாதபுரம் ,சுப்பையா லே-அவுட்டை சேர்ந்தவர் கணேசன், இவரது மகன் லோகேஷ் (வயது 24) இவர் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-4 -20 24 அன்று இவரது வாட்ஸ் அப்புக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் புதிதாக தொடங்கியுள்ள பங்கு சந்தை வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை நம்பிய லோகேஷ் பல்வேறு தவணைகளில் ரூ. 28 லட்சத்து 63 ஆயிரத்தை வங்கிக் கணக்கில் அனுப்பி வைத்தார். பிறகு எந்த தகவலும் வரவில்லை. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த லோகேஷ் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
பங்கு சந்தை முதலீட்டில் அதிக லாபம் தருவதாக ரூ.28 லட்சம் மோசடி – சைபர் கிரைம் போலீசில் புகார்..!!
