கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் பி .எஸ் . சிவக்குமார் (வயது 51) இவர் அந்த பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். இவரிடம் கோவை ராமநாதபுரம் ,சுங்கம் பகுதியில் நகை கடை நடத்தி வரும் கே. பி. பாலன் என்பவர் 4192. 29O கிராம் தங்க நகைகளை கடனுக்கு வாங்கியிருந்தாராம். அதற்கு பணம் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகை வியாபாரி சிவகுமார் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி நகைக்கடை அதிபர் கே. பி. பாலன் மீது மோசடி உட்பட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்..
ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள் மோசடி… கோவை வியாபாரி மீது வழக்குபதிவு..!
