ராணுவத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி – பெண்கள் உள்பட 5 பேர் மீது வழக்கு..!

கோவை : தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அழகர்ராஜா. (வயது 30) இவரிடம் கோவையை சேர்ந்த மனோஜ் பிரபாகர் என்பவர் சுஜாதா மதுமோகன், ரவி, ராஜேஸ்வரி ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் ராணுவத்தில் உள்ள உயர் அதிகாரிகளை தங்களுக்கு தெரியும் அவர்கள் மூலம் ராணுவத்தில் வேலைக்கு சேர்த்து விடலாம் என்று கூறினார்கள். இதை நம்பிய அழகர்ராஜா அபிலாஷ் சத்தியசீலன் தாமோதரன் ஆகிய 3 பேரை ராணுவத்தில் சேர்ப்பதற்கு ரூ. 30 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தார். ராணுவத்தில் சேர்த்து விடவில்லை. அவர்கள் பணத்தை திருப்பி கேட்ட போது கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து அழகர்ராஜா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சுஜாதா, மதுமோகன் மனோஜ் பிரபாகர் ,ரவி. ராஜேஸ்வரி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..