கோவையில் சட்ட விரோதமாக செம்மன் எடுத்த நிலம் மற்றும் செங்கல் சூளை உரிமையார்களுக்கு ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க ஆட்சியர் பரிந்துறை…
மண் அளவினை கணக்கிட்டு செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் பரிந்துரைத்துள்ளார். இதில் 4 ஊராட்சிகளிலும் 1.10 கோடி கன மீட்டர் மண் எடுக்கப் பட்டுள்ளதாகவும், இதற்காக நில உரிமையாளர்களுக்கும், செங்கல் சூளை நிறுவனங்களுக்கும் ரூ.373.74 கோடி அபராதம் விதிக்க பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளிலும் செங்கல் உற்பத்திக்காக எடுக்கப்பட்டு, கொட்டி வைக்கப்பட்டுள்ள மண் தொடர்பாக கனிம வளத் துறை, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், வருவாய்த் துறை சார்பில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் செங்கல் செய்வதற்காக தோண்டி எடுக்கப்பட்டுள்ள மண் தரத்தை ஆய்வு செய்து அதற்கான மதிப்பீடு குறிப்பிட்டப்பட்டு அப ராதம் விதிக்க பசுமை தீர்ப்பாயத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது தொடர்பாக பசுமை தீர்ப்பாயமே இறுதி செய் யும் என்றார்.