மூதாட்டியிடம் ரூ.4 கோடி, 200 பவுன் நகை மோசடி – பெண் உட்பட 2 பேர் மீது புகார்.!!

கோவை சிங்காநல்லூர் ஆர். கே .கே நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்.இவரது மனைவி விசாலாட்சி ( வயது73) இவரது கணவர் இறந்து விட்டார். மகள்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இந்த நிலையில் இவர்களது குடும்ப நண்பர் சக்திவேல், விசாலாட்சியின் வீட்டின் மாடியில் தனது உதவியாளர் ஜெயலட்சுமியுடன் குடியிருந்து வந்தார்.விசாலாட்சியின் கணவர் தனது வங்கி கணக்கில் ரூ. 4 கோடி டெபாசிட் செய்து வைத்திருந்தார். இந்தப் பணத்தையும்,வங்கியில் இருந்த 200 பவுன் நகைகளையும் சக்திவேலும் , உதவியாளர் ஜெயலட்சுமியும் போலி கையெழுத்து போட்டு மோசடி செய்து விட்டனர். இதைக் கேட்ட விசாலாட்சிக்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசில் விசாலாட்சி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் இளங்கோவன் விசாரணை நடத்தி சக்திவேல், ஜெயலட்சுமி ஆகியோர் மீது மோசடி உட்பட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..